Press "Enter" to skip to content

டெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86 சதவீதமாக அதிகரிப்பு

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மத்திய அரசுடன் இணைந்து டெல்லி மாநில ஜெக்ரிவால் அரசு தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வந்தது. மேலும், குணடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

நேற்று 1,025 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,866 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் மொத்தம் 1,28,389 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில, 1,10,931 பேர் குணமடைந்துள்ளனர். இது 86.4 சதவீதமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63.5 சராசரியாகும்.

தற்போது 13,681 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். சிட்டியில் உள்ள 15,475 அர்ப்பணிப்பு படுக்கைகளில் 12,265 காலியாக உள்ளது. கொரோனா மையத்தில் 8,032 படுக்கைகள் காலியாக உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 702 ஆக உள்ளது.

ஜூன் 4-ந்தேதி டெல்லியில் 14,456 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது ஏழு வாரங்களுக்குப் பிறகு அது 13,681 ஆக குறைந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »