Press "Enter" to skip to content

பீகார் வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பாதிப்பு – நிவாரண பணிகளை முடுக்கிவிட்ட நிதிஷ்குமார்

பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.

பாட்னா:

பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பீகார் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பிரத்யயா கூறுகையில், பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பீகார் வெள்ளத்தால் தர்பங்கா மாவட்டத்தில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. கந்தக் நதி மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், மக்களுக்கு உதவும் வகையில் 21 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பீகார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »