Press "Enter" to skip to content

சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு – கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு

சென்னையில் இருந்து விமானங்கள் வருவதற்கு ஆகஸ்டு 15-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுகிறது என கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

கொல்கத்தா:

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.  தொடர்ந்து, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2.40 லட்சத்தை நெருங்குகிற்து. தமிழக தலைநகர் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முதலிடம் வகிக்கிறது.

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் இருந்து விமானங்கள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கொல்கத்தா விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமான சேவைகளுக்கு  விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 15 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »