Press "Enter" to skip to content

அசாமில் வெள்ள பாதிப்புகளால் 2.25 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் அதிகரிக்கும் அடைமழை (கனமழை)யால் சுமார் 2.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கவுகாத்தி:

நாட்டின் வடபகுதிகளில் பெய்துவரும் அடைமழை (கனமழை)க்கு பீகார், அசாம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் அசாமில் அதிகரிக்கும் அடைமழை (கனமழை)யால் சுமார் 2.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை (கனமழை)யால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட புதிய வெள்ளம் காரணமாக 13 வருவாய் வட்டங்களைக் கொண்ட 219 கிராமங்களில் சுமார் 2.25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த பாதிப்புகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ( ASDMA ) அளித்துள்ள தகவலின்படி, இந்த ஆண்டில் மூன்றாவதாக வெள்ளத்தால் தேமாஜி, லக்கிம்பூர், மோரிகான், நாகான், மஜூலி, மேற்கு கர்பி அங்லாங், சிப்சாகர், திப்ருகார் மற்றும் டின்சுகியா ஆகிய மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 10,000 ஹெக்டேர் பயிர் பரப்பளவு வெள்ள நீரில் மூழ்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »