Press "Enter" to skip to content

தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய மந்திரி சென்ற உலங்கூர்தியில் திடீர் கோளாறு – பரபரப்பு

தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சென்ற உலங்கூர்தியில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மத்திய மந்திரி எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

பாட்னா:

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தின் சட்டமன்றத்தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய மூன்று தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணிக்கு போட்டியிடுகிறது. அதேபோல், தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் நட்சத்திர பேச்சாளர்களை பீகார் களத்தில் இறக்கியுள்ளன. 

பாஜக கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ஸ்மிர்தி இராணி உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளன

இந்நிலையில், பீகாரின் ஜன்ஜர்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் இன்று உலங்கூர்தி மூலம் சென்றார்.

ஆனால், அவர் உலங்கூர்தியில் இருந்து இறங்கிய பின்னர் அதில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் மின் இறக்கைகளில் ஒன்றில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்ட்ள்ளது. இந்த சம்பவத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் காயமின்றி உயிர்தப்பினார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »