Press "Enter" to skip to content

ஷிகர் தவான் அபார சதம் – சென்னையை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

ஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.

சார்ஜா:

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. சாம் கர்ரன் மற்றும் டு பிளசிஸ் அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

சாம் கர்ரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்துவந்த ஷேன் வாட்சன், டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

வாட்சன் 36 ஓட்டத்தில் வெளியேறினார். டு பிளசிஸ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 58 ஓட்டத்தில் அவுட்டானார்.

கேப்டன் டோனி 3 ஓட்டத்தில் அவுட்டானார். 

அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்துவந்த ஜடேஜா, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஓட்டத்தை குவிப்பில் ஈடுபட்டார்.

இறுதியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 மட்டையிலக்குடுக்கு 179 ஓட்டங்கள் குவித்துள்ளது. அம்பதி ராயுடு 45 ரன்னுடனும், அதிரடியாக ஆடிய ஜடேஜா 13 பந்தில் 4 சிக்சர் உள்பட 33 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

டெல்லி சார்பில் நார்ட்ஜீ 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார்.  

180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

பிரித்வி ஷா முதல் சுற்றில் டக் அவுட்டானார். ரகானே 8 ரான்னில் வெளியேறினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தவான் பொறுப்புடன் ஆடினார். ஷ்ரேயஸ் அய்யரும் தவானும் சேர்ந்து 68 ஓட்டங்கள் சேர்த்தனர். அய்யர் 23 ஓட்டத்தில் அவுட்டானார்.

தொடர்ந்து இறங்கிய ஸ்டோய்னிஸ் 24 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 4 ரன்னிலும் வெளியேறினர். அதிரடியாக ஆடிய தவான் சதமடித்தார். 

இறுதியில் டெல்லி அணி 19.5 சுற்றில் 5 மட்டையிலக்குடுக்கு 185 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 101 ரன்னும், அக்சர் படேல் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »