Press "Enter" to skip to content

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பாராட்டத்தக்க சாதனை – வெங்கையா நாயுடு பெருமிதம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

புதுடெல்லி:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கோவிட் -19 (கொரோனாவுக்கு) 2 தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இது அறிவியலில் இந்தியாவின் முன்னேற்றம். மனித குலத்துக்கு பெரியளவில் பயனளிக்கும். தற்சார்பு இந்தியா எப்படி பயன் அடைகிறது என்பதற்கு இது ஒரு அறிகுறி. இது இந்தியர்களுக்கு மட்டும் பலன் அளிக்காமல், மனித குலத்துக்கு மிகப்பெரிய அளவில் பலனளிக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கடந்தாண்டு நமது நாடு காட்டிய உறுதியை, இந்தாண்டு, அதே உத்வேகத்துடன், மக்களுக்கு தடுப்பூசியைக் கொண்டு செல்வதிலும் காட்ட வேண்டும்.

மிகவும் அவசியமான கொரோனா தடுப்பூசியை, உள்நாட்டில், அதிகளவு உற்பத்தி செய்யும் திறனை வெளிக்காட்டியதன் மூலம் கொள்ளை நோயிலிருந்து மனித குலத்தைக் காப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசியில், ஒட்டுமொத்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அணுகுமுறையில் தனிச்சிறப்பான அம்சங்கள் உள்ளன. இது பாராட்டத்தக்க சாதனை ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »