Press "Enter" to skip to content

கொரோனா – அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் காலமானார்

கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதரன் உயிரிழந்தார்.

கோவை : 

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகேயுள்ள பச்சார்பாளையத்தைச் சேர்ந்தவர் ப.வெ.தாமோதரன் (76). ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அ.தி.மு.க.வில் முன்னாள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர், எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் மாநில துணைத் தலைவர், ஆவின் முன்னாள் தலைவர் ஆகிய பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 15-ம் தேதி உடல்நலக் குறைவால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்புகள் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நோய்த் தொற்றின் தீவிரத்தாலும், நுரையீரல் பாதிப்பாலும் முன்னாள் அமைச்சர் தாமோதரன் நேற்று மாலை உயிரிழந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »