Press "Enter" to skip to content

தமிழகத்தில் 16ந் தேதி கொரோனா தடுப்பூசி- எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் 16-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந் தேதியன்று தொடங்கி வைக்கிறார். அதற்காக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 5.56 லட்சம் டோஸ் தடுப்பு மருந்தில் 5.36 லட்சம் மருந்து வந்துள்ளது. முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-ந் தேதி மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நிரல் இன்னும் அரசுக்கு வரவில்லை.

அவரது நிகழ்ச்சிக்கு ஏற்ப முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கான நேரம் ஏற்பாடு செய்யப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »