Press "Enter" to skip to content

கட்சி விரோத நடவடிக்கை – திரிணாமுல் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் எம்எல்ஏ

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பெண் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டு உள்ளார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

திரிணாமுல் காங்கிரசியில் பெண் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வைஷாலி டால்மியா. பள்ளி தொகுதியின் எம்.எல்.ஏ.வான அவர், கட்சியின் தலைமைத்துவத்தில் உள்ளவர்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக வெளிப்படையாகவே பேசி வந்துள்ளார்.

கட்சியில் நேர்மை மற்றும் உண்மையாக இருப்பவர்களுக்கு இடம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பெண் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒழுங்கு குழு கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியதில், டால்மியாவை கட்சியில் இருந்து வெளியேற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, மேற்கு வங்காள வனத்துறை மந்திரி ராஜீப் பானர்ஜி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த சில மணிநேரங்களில் பெண் எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ராஜீப் ராஜினாமா செய்த பின்னர், கட்சியின் தலைமைத்துவம் பற்றி விமர்சித்து டால்மியா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »