Press "Enter" to skip to content

மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. தரவு’ வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கல்லூரி மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. தரவு’ வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை:

கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் இணையவழி (கணினிமய) வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த வகுப்புகளில் வீட்டில் இருந்தவாறு மாணவர்கள் பங்கேற்று, தங்களுடைய பாடத்திட்டங்களை படித்து வருகின்றனர்.

இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிநுட்பம் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களுக்கு ‘2 ஜி.பி. தரவு’ (‘2 ஜி.பி. தரவு’) வழங்கப்படும் என்றும், எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா ‘தரவு அட்டைகள்’ (‘தரவு அட்டை’) வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 10-ந் தேதி அறிவித்து இருந்தார்.

அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு ‘2 ஜி.பி. தரவு’ வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »