Press "Enter" to skip to content

ராட்சத பனிப்புயல் இங்கிலாந்தை புரட்டிப்போடும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ராட்சத பனிப்புயல் ஒன்று இங்கிலாந்தை புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

லண்டன்:

இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா  தொற்றால் அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போது  பனிப்புயல் ஒன்று அந்நாட்டிக்கு ஆபத்தை ஏற்படுத்த உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மழையும் பனியுமாக நாட்டில் பெரும் இடையூறை ஏற்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் -15 டிகிரி மற்றும் இங்கிலாந்தில் -6 டிகிரி செல்ஷியஸாக வெப்பநிலை இறங்க இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின்  மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீட்டர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீட்டர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது

கிராமப் பகுதிகள் துண்டிக்கப்படலாம் என்றும், வாகன ஓட்டுனர்கள்  மோசமான சூழல் மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடலாம் என்றும், மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இங்கிலாந்தைப் பொருத்தவரை, மோசமான வானிலை காரணமாக பெரு வெள்ளம் ஏற்படலாம் என்றும், 200 இடங்களுக்கு ஏற்கனவே பெரு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »