Press "Enter" to skip to content

சென்னை திரும்பிய சசிகலா ராமாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்

பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலா நேற்று காலை தேர் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார்.

வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

சிறையில் இருந்து விடுதலையான பின், முதன்முறையாக மவுனம் கலைத்து நேற்று பேட்டிளியத்தார். அப்போது அவர் கூறுகையில், தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.

ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன். அதிமுக பொது எதிரி ஆட்சிக் கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம் என தெரிவித்தார்.

இந்நிலையில், பெங்களூருசிறையில் இருந்து விடுதலையான பின்னர் சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.

சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா, அவரது வாரிசுகளிடம் நலம் விசாரித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »