Press "Enter" to skip to content

தமிழகத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கம் – அரசு முடிவு

தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் சென்றுவரும் விமானங்களின் எண்ணிக்கையில் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது

சென்னை:

தமிழக அரசு தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை விமான நிலையத்துக்கு வரும் உள்ளூர் விமானங்களின் எண்ணிக்கையை 50-ல் இருந்து 144 ஆக உயர்த்தவேண்டும் என்று சென்னை விமான நிலைய இயக்குனர் கடிதம் எழுதி இருந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அந்த எண்ணிக்கையை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்த வேண்டும் என்று சென்னை விமான நிலைய இயக்குனர் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் நீங்கள் (மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறை செயலாளர்) தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தின் அடிப்படையில், தற்போது தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் சென்றுவரும் விமானங்களின் எண்ணிக்கையில் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »