Press "Enter" to skip to content

சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

* கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

* குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

* சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்.

* கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும்.

* காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, வன்முறை தொடர்பான வழக்குகள் தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »