Press "Enter" to skip to content

மெட்ரோ தொடர் வண்டி கட்டணம் குறைப்பு- முதலமைச்சர் அறிவிப்பு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ தொடர் வண்டி கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

* சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ தொடர் வண்டி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரெயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* 5-12 கி.மீ. வரையிலான கட்டணமான 40 ரூபாயை ரூ.30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* 2-5 கி.மீ. வரை கட்டணம் ரூ.20, 0-2 கி.மீ. வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லை.

* க்யூ ஆர் கோடு, தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணித்தால் 20 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

* வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து இனி 54 கி.மீ. 100 ரூபாயே வசூலிக்கப்படும். ஏற்கனவே வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடம் தவிர்த்து 45 கி.மீ.க்கு ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்தது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »