Press "Enter" to skip to content

பிரேசிலை துரத்தும் கொரோனா – 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

பிரேசில் நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.01 கோடியைத் தாண்டியுள்ளது.

ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.01 கோடியைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 91 லட்சத்தை நெருங்கி வருகிறது. சுமார் 8.26 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »