Press "Enter" to skip to content

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 11 மாதத்துக்குப் பிறகு தொடர் வண்டி சேவைகள் மீண்டும் தொடங்கின

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதினொரு மாதங்களுக்குப் பிறகு தொடர் வண்டி சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

ஸ்ரீநகர்:

கொரோனா தொற்று காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர் வண்டி சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பதினொரு மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கி உள்ளன. காஷ்மீரின் தொடர் வண்டி சேவை இயக்கம், எளிமையை மேம்படுத்துவதோடு சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று மத்தியதொடர்வண்டித் துறை மந்திரி பியூஷ் கோயல் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ரெயில்வே துறையானது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மீ்ண்டும் தொடர் வண்டி சேவையை 11 மாதங்களுக்கு பிறகு தொடங்கி உள்ளது. பனிகல்-பாரமுல்லா இடையே ஆரம்ப கட்டமாக தொடர் வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்கக் கூடியதாகும். கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் எப்போது முதல் தொடர் வண்டி சேவையை தொடங்குவது என்பதற்கு உறுதியான தேதி எதையும் நிர்ணயிக்க முடியாத சூழல் நிலவியது. இப்போது அடுத்தடுத்த கட்டமாக தொடர் வண்டி சேவை அதிகரிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

ஏற்கனவே 65 சதவீத தொடர் வண்டி சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் 250 தொடர் வண்டிகள் ஜனவரி மாதத்தில் மட்டும் கூடுதலாக இயக்கப்பட்டு உள்ளன. இனி மேலும் தொடர் வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது அனைத்தும் சிறப்பு தொடர் வண்டிகளாக, முன்பதிவு முறையில் இயக்கப்படுகின்றன. வழக்கமான அனைத்து தொடர் வண்டி சேவைகளுக்கான தடை கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »