Press "Enter" to skip to content

உள்துறை மந்திரி அமித்ஷா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

புதுடெல்லி:

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16-ம் தேதியில் இருந்து தொடங்கி நடந்து வருகின்றன. இதன்படி முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதுவரை நாட்டில் மொத்தம் 1 கோடியே 43 லட்சத்து ஓராயிரத்து 266 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  
இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் இணை வியாதிகளை உடைய 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

சுப்ரீம் நீதிமன்றம் நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷாவும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »