Press "Enter" to skip to content

பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்

பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சண்டிகர்:

எதிர்காலம் பற்றி கணிக்க முடியாத அரசியல் சூழல்களில் சிக்கி தடுமாறும் அரசியல் கட்சிகளுக்கான வெற்றிகரமான தேர்தல் பிரசார திட்டங்களை வழங்குவதில் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, 70 இடங்களில் 62 இடங்களில் வெற்றி பெற திட்டம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரிடம், 2021 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்யத் தேவையான திட்டங்களை முன்னெடுக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதத் தொடக்கத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர் தலைமையிலான இந்திய அரசியல் செயல் குழுவினரை (ஐ-பி.ஏ.சி) பணியமர்த்தியுள்ளதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார்.

இதற்கிடையே, பஞ்சாப்பில் கடந்த 2017ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் வியூகங்களை வகுத்து தரும் பணியை பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு (2022) இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின் முதன்மைச் செயலராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

கேபினட் மந்திரி அந்தஸ்துடன் கூடியது இந்தப் பதவி ஆகும். அவருக்கு தனியாக வாகனம், அலுவலகம், ஊழியர்கள், பயணப்படி ஆகியவை உண்டு. கவுரவ மாத சம்பளமாக 1 ரூபாய் வழங்கப்படும் என அவருக்கான பணி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »