Press "Enter" to skip to content

குஜராத் சிறையில் கைதிகளால் நடத்தப்படும் வானொலி நிலையம்

குஜராத் மாநில மத்திய சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து வானொலி நிலையம் ஒன்றை அமைத்துள்ளனர்.‌ இந்த வானொலிக்கு சிறை வானொலி என பெயரிடப்பட்டுள்ளது.

சிறை வளாகத்துக்குள் ஸ்டூடியோவை அமைத்துள்ள அதிகாரிகள் கைதிகள் வானொலியை கேட்பதற்கு ஏதுவாக சிறை முழுவதும் 60 க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை நிறுவியுள்ளனர். கைதிகளில் ஒரு சிலருக்கு வானொலியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறைச்சாலையில் கைதிகள் நல அலுவலர் மகேஸ் ரத்தோட் கூறுகையில், “ இந்த வானொலி சேவையின் முக்கிய நன்மை என்னவென்றால் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கைதிகள் மத்தியில் கல்வி மற்றும் விழிப்புணர்வை பரப்ப முடியும்” என்றார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »