Press "Enter" to skip to content

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »