Press "Enter" to skip to content

அசாம் சட்டசபை தேர்தல் – 40 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

கவுகாத்தி:

தமிழ்நாட்டுடன் சேர்த்து அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது ஆளும் கட்சியாக பா.ஜ.க. உள்ளது. அதை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணியை அமைத்துள்ளது.

அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. அணியில் இருந்த பல கட்சிகளை இப்போது காங்கிரஸ் தன் பக்கம் இழுத்துள்ளது. இதனால் அசாம் மாநிலத்தில் போட்டி கடுமையாக மாறி இருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அசாம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 40 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »