Press "Enter" to skip to content

நேபாள பிரதமருக்கு கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கி, புனேவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’‌ தடுப்பூசிகள் நேபாளத்துக்கு வழங்கப்பட்டது.

காத்மாண்டு:

கொரோனா இடா்பாட்டு காலத்தில் அண்டை நாடுகளுக்கு உதவும் விதமாக மானிய உதவியின் கீழ் நேபாளத்துக்கு இந்தியா கடந்த ஜனவரி மாதம் 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கி, புனேவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’‌ தடுப்பூசிகள் நேபாளத்துக்கு வழங்கப்பட்டது.

தற்போது அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி 7-வது கட்டத்தை எட்டியுள்ளது. இந்த 7-வது கட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நேற்று முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 69 வயதான கே.பி.சர்மா ஒலிக்கும், அவரது மனைவி ராதிகா சக்யாவுக்கும் ‘கோவிஷீல்டு’‌ தடுப்பூசி போடப்பட்டது.

அதன் பின்னர் நாட்டில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கே.பி.சர்மா ஒலி அழைப்பு விடுத்தார்.‌

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »