Press "Enter" to skip to content

தமிழக சட்டசபை தேர்தல்- பாமக இன்று அவசர ஆலோசனை

பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இன்று காணொலி மூலம் அவசர ஆலோசனை நடைபெறும் என அதன் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பாமக தனது தேர்தல் அறிக்கையையும் கடந்த வாரம் வெளியிட்டது.

பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் பாமக இன்று நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் காணொலி மூலம் அவசர ஆலோசனை நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

ஆலோசனையில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »