Press "Enter" to skip to content

சென்னையில் 14 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. முடிவு

சென்னையை மீண்டும் தி.மு.க. கோட்டையாக மாற்றும் வகையில் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை:

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் தற்போது 11 தொகுதிகள் தி.மு.க. வசம் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதன் மூலம் மீண்டும் சென்னை தி.மு.க. கோட்டையானது.

ராயபுரம், விருகம்பாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றார்.

தி.மு.க. வெற்றிபெற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று இருந்தன. இந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க. அதிக இடங்களில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் 14 தொகுதிகளுக்கு குறையாமல் தி.மு.க. நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை மீண்டும் தி.மு.க. கோட்டையாக மாற்றும் வகையில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.

தற்போது உள்ள 11 தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு பெரும்பாலும் சீட் கொடுக்க வாய்ப்பு உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று அல்லது 2 இடங்கள் ஒதுக்கிவிட்டு மற்ற இடங்களில் தி.மு.க. போட்டியிட விரும்புகிறது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்-கொளத்தூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி-உதயநிதி ஸ்டாலின், துறைமுகம்-பி.கே. சேகர்பாபு, சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன், அண்ணாநகர்-மோகன், ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.

எழும்பூர் தொகுதி-கே.எஸ்.ரவிச்சந்திரன், பெரம்பூர்- ஆர்.டி.சேகர், திரு.வி.க.நகர்-தாயகம் கவி, தமிழ் வேந்தன், சோழிங்கநல்லூர்- அரவிந்த் ரமேஷ், மாதவரம்- சுதர்சனம், வில்லிவாக்கம்- ரெங்கநாதன், மறைந்த க.அன்பழகன் பேரன் வெற்றி, ராயபுரம்-மாவட்ட செயலாளர் இளைய அருணா, வர்த்தக பிரிவு செயலாளர் பாண்டி செல்வம், நா.மனோகரன் ஆகியோர் போட்டியிட சீட் கேட்டுள்ளனர்.

இதேபோல வேளச்சேரி- வாகை சந்திரசேகரன், ஆயிரம் விளக்கு- மாவட்ட செயலாளர் சிற்றரசு. கடந்த முறையை விட கூடுதல் இடங்களில் போட்டியிட்டு தலைநகரை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் கூட உதய சூரியன் சின்னத்தில் நிற்க வைக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம். மற்ற அனைத்து தொகுதியிலும் தி.மு.க.வே போட்டியிடுகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »