Press "Enter" to skip to content

இந்தியாவில் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி, அவை கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

புதுடெல்லி:

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி, அவை கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

தடுப்பூசி திட்டத்தின் 52-வது நாளான நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஒரே நாளில் 20 லட்சத்து 19 ஆயிரத்து 723 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுதான் ஒரு நாளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இவர்களில் 17 லட்சத்து 15 ஆயிரத்து 380 பேர், 28 ஆயிரத்து 884 அமர்வுகள் மூலம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தப்பெற்றனர்.

மேலும் 3 லட்சத்து 4 ஆயிரத்து 343 சுகாதார பணியாளர்களும், முன்கள பணியாளர்களும் தடுப்பூசியின் 2-வது டோஸ்களை பெற்றுக்கொண்டனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரையில் 2 கோடியே 30 லட்சத்து 8 ஆயிரத்து 733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »