Press "Enter" to skip to content

75-வது சுதந்திர தின விழா 75 வாரங்களுக்கு நடைபெறும் – பிரதமர் மோடி

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் எம்.பி.க்களும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி:

டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி பங்கேற்றார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாட்டின் 75-வது சுதந்திர தினம், ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்படும். நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும்.

இந்த கொண்டாட்டங்கள், 12-ந்தேதி (நாளை) குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்குகிறது.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் எம்.பி.க்களும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற எம்.பி.க்கள் அனைவரும் உதவ வேண்டும். பொதுமக்களை வாகனங்கள் மூலம் தடுப்பூசி மையத்துக்கு அழைத்துவர வேண்டும். தடுப்பூசி மையத்தில் தேவையான ஏற்பாடுகளை செய்வதில் உதவ வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், கொரோனா காலத்தில் பிரதமர் மோடியின் திறமையான, உறுதியான தலைமைக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவும் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »