Press "Enter" to skip to content

மகா சிவராத்திரி: கோவில்களில் 50 பேருக்கு மேல் கூட தடை

மகா சிவராத்திரி தினமான இன்று மகாராஷ்டிரா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.

மும்பை :

மகாராஷ்டிராவில் சமீப நாட்களாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அதிதீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து தளர்த்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு மீண்டும் விதித்து வருகிறது. மேலும் பொது இடங்களில் கூட்டம் கூடவேண்டாம், கண்டிப்பாக முககசவம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதை அரசு வலியுறுத்துவதோடு, மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மகா சிவராத்திரி தினமான இன்று அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.

இதன்படி சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஒரேநேரத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கோவிலில் இருக்கக்கூடாது. கோவில்களுக்கு கூட்டமாக சேருவதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்யலாம்.

கோவில் நிர்வாகிகள் வளாகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வதை உறுதி செய்யவேண்டும். மேலும் கோவிலுக்குள் வருபவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன், முகக்கசவம் அணிவதை உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »