Press "Enter" to skip to content

மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் வெட்கக்கேடான செயல்: மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது என்றும் இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை :

மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரேயபாரா அருகே கோவிலுக்கு சென்று சாமி பார்வை செய்தார் மம்தா பானர்ஜி. பின்னர் அங்கிருந்து வெளியேறி, காரில் ஏற முயன்றபோது அவரை சில ஆண்கள், பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.

நான்கைந்து நபர்கள் தன்னை தள்ளிவிட்டதால் காலில் அடிபட்டு வீங்கியிருப்பதாகவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் மம்தா கூறினார். சம்பவம் நடந்தபோது காவல் துறையினர் யாரும் அருகில் இல்லை என்றும் அவர் கூறினார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது என்றும் இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »