Press "Enter" to skip to content

ஈஷா யோகா மையத்தில் உற்சாகத்துடன் தொடங்கியது மகா சிவராத்திரி விழா… நேரலை

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் விமரிசையாக தொடங்கியது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இன்று மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை முதல் நாளை காலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மகா சிவராத்திரி விழாவை மிகவும் உற்சாகமாக கொண்டு செல்லும் வகையில், பல்வேறு இடங்களில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

கோவை ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் விமரிசையாக மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு, சத்குரு முன்னிலையில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்பார்கள். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்படும்.

அவ்வகையில் இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.

பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரைவி மகா ஆரத்தி, சத்குருவின் சொற்பொழிவு மற்றும் நள்ளிரவு தியானம், ஆதியோகி திவ்ய பார்வை, சத்குரு சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில், ஷம்போ தியானம், பிரம்மா முகூர்த்த மந்திரம் என பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் அரங்கேற உள்ளன.

விடிய விடிய பிரபல கலைஞர்களின் இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதன்மூலம் இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருப்பதுடன், உற்சாகமாக மகா சிவராத்திரி பிரார்த்தனைகளையும், தியானத்தையும் மேற்கொள்ள முடியும்.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே நேரடியாக விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே சிவராத்திரி விழாவை கண்டுகளிக்கும் வகையில், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »