Press "Enter" to skip to content

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் மகா சிவராத்திரி விழா… நேரலை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியுடனான மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இன்று மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை முதல் நாளை காலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மகா சிவராத்திரி விழாவை மிகவும் உற்சாகமாக கொண்டு செல்லும் வகையில், பல்வேறு இடங்களில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியுடனான மகா சிவராத்திரி விழா இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியுடன் இன்று மாலை வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.

மாலை 6 மணிக்கு மகா ருத்ர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதைத்தொடர்ந்து, இரவு 11.45 மணிக்கு நள்ளிரவு தியானம் நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி உரை நிகழ்த்துகிறார்.   

இதைத்தொடர்ந்து காலை 4.30 மணிக்கு ருத்ர சடங்குத்தீ என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற உள்ளன.

இதனால்  இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருப்பதுடன், உற்சாகமாக மகா சிவராத்திரி பிரார்த்தனைகளையும், தியானத்தையும் மேற்கொள்ள முடியும்.

பக்தர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே குருஜியுடனான சிவராத்திரி விழாவை கண்டுகளிக்கும் வகையில் https://www.youtube.com/watch?v=5Tm3Fc9h1-o யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »