Press "Enter" to skip to content

பரபரப்பான கடைசி ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி- ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது

ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றியது.

புனே:

இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 மட்டையிலக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று பகல்-இரவு ஆட்டமாக புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் மட்டையாட்டம் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 78 ஓட்டங்கள் விளாசினார். ஷிகர் தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும், ரோகித் சர்மா 37 ரன்களும், ஷர்துல் தாகூர் 30 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 மட்டையிலக்குடுகள் கைப்பற்றினார்.

இதையடுத்து 330 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே சறுக்கியது. துவக்க வீரர்கள் ஜேசன் ராய் 14 ரன்களிலும்,  ஜானி பேர்ஸ்டோ ஒரு ரன்னிலும் வெளியேறினர். இந்த இரு மட்டையிலக்குடுகளையும் புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸ்-டேவிட் மாலன் ஜோடி நிதானமாக விளையாடியது. இவர்களில் பென் ஸ்டோக்ஸ் 35 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் (15), லிவிங்ஸ்டன் (36) ஆகியோரை ஷர்துல் தாகூர் அவுட் ஆக்கினார். அதன்பின்னர் அரை சதம் அடித்த டேவிட் மாலனும், ஷர்துல் தாகூரிடம் மட்டையிலக்குடை பறிகொடுத்தார்.

168 ஓட்டங்களில் 6 முக்கிய மட்டையிலக்குடுகளை இழந்ததால் இங்கிலாந்து தடுமாறியது. அதன்பின்னர் மட்டையிலக்குடை காப்பாற்ற சாம் கர்ரன் கடுமையாக போராடினார். நெருக்கடிக்கு மத்தியிலும் அரை சதம் கடந்த அவர் சதத்தை நெருங்கினார். மறுமுனையில் மொயீன் அலி 29 ரன்களிலும், அடில் ரஷித் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி சுற்றில் 14 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை நடராஜன் வீசினார். யார்க்கராக வீசிய முதல் பந்தில் சாம் கர்ரன் ஒரு ஓட்டத்தை எடுத்தார். ஆனால் இரண்டாவது ஓட்டத்தை எடுக்கும் முயற்சியின்போது, மார்க் வுட் ஓட்டத்தை அவுட் செய்யப்பட்டார்.

இரண்டாவது பந்தை எதிர்கொண்ட டோப்லே ஒரு ஓட்டத்தை எடுத்தார். அடுத்த 2 பந்துகளை தவறவிட்ட சாம் கர்ரன், 5வது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஓட்டத்தை எடுக்கவில்லை. இதனால் அந்த சுற்றில் இங்கிலாந்து 6 ரன்களே எடுத்தது. 50 ஓவர் முடிவில் 9 மட்டையிலக்கு இழந்து 322 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி வரை போராடிய சாம் கர்ரன் 95 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

உலகக் கோப்பை இறுதிப் போட்டி போன்று நடந்த இந்த ஆட்டத்தில், இந்தியா 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டி கொண்ட தொடரையும் 2-1 என கைப்பற்றியது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »