Press "Enter" to skip to content

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – மம்தா பானர்ஜி அழைப்புக்கு மெகபூபா முப்தி ஆதரவு

ஜனநாயகம் மீதும், அரசியல் சட்டம் மீதும் பா.ஜ.க தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.

புதுடெல்லி:

மேற்கு வங்காள சட்டசபைக்கு 2-வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. அதற்கு முன்பாக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், ஜனநாயகம் மீதும், அரசியல் சட்டம் மீதும் பா.ஜ.க தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். எனவே, பா.ஜ.க.வுக்கு எதிராக நம்பகமான மாற்று சக்தியை முன்னிறுத்த வேண்டும், அதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு, உறுதியான போரை நடத்துவோம் என்று எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், மம்தாவின் கடிதத்துக்கு மக்கள் ஜனநாய கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான மெகபூபா முப்தி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஜனநாயகத்தையும், அதன் மாண்புகளையும் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்ற தங்களின் (மம்தா பானர்ஜி) கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

கூட்டாட்சி நடைமுறையை மத்திய அரசு குழிதோண்டி புதைப்பது பற்றிய தங்களது கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். எனவே, இதற்கு எதிராக கூட்டுப்போர் தொடுப்பதுதான் இப்போதைய தேவை ஆகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »