Press "Enter" to skip to content

கும்பமேளாவை முன்னிட்டு ஹரித்வாரில் பாதிகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

உத்தரகாண்டின் ஹரித்வாரில், வரலாற்று சிறப்பு மிக்க கும்பமேளா நேற்று முறைப்படி தொடங்கியது.

ஹரித்வார்:

உத்தரகாண்டின் ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராடும் கும்பமேளா நிகழ்ச்சி 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு இந்த கும்பமேளா நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

இந்த ஏற்பாடுகள் முடிந்து நேற்று இந்த கும்பமேளா நிகழ்ச்சி முறைப்படி தொடங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கும்பமேளாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பீதிக்கு மத்தியில் இந்த ஆண்டு நடைபெறும் கும்பமேளாவில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக கும்பமேளாவின் கால அளவு 1 மாதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக இந்த சிறப்பு நிகழ்ச்சி சுமார் 4 மாதங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த கும்பமேளாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக 12 ஆயிரம் காவல் துறையினர், 400 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இதைப்போல 38 தற்காலிக மருத்துவமனைகள், 200 மருத்துவர்கள், 1500 துணை மருத்துவ பணியாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »