Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை – 80 நாடுகளுக்கு அனுப்பியுள்ளோம் என மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

புதுடெல்லி:

இந்தியாவிடம் நேபாளம் கூடுதலாக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கேட்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:

கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக வேக்சின் மைத்ரி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வெற்றிகரமாக நடந்து வரும் இத்திட்டத்தை உலக நாடுகள் விரும்புகின்றன. இதன்படி, 80-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு 6 கோடியே 44 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை அனுப்பி உள்ளோம்.

உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து விட்டுத்தான் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பப்படும் என்று எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அதை உலக நாடுகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். அதற்காக தடுப்பூசி ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »