Press "Enter" to skip to content

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி:

இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி 7 கோடியே 59 லட்சத்து 79 ஆயிரத்து 651 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 43 சதவீத தடுப்பூசிகள் (3 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 437 தடுப்பூசிகள்) மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரையில் 73 லட்சத்து 54 ஆயிரத்து 244 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மொத்த தடுப்பூசிகளில் 9.68 சதவீதம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 69 லட்சத்து 23 ஆயிரத்து 8 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 66 லட்சத்து 43 ஆயிரத்து 96 தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 64 லட்சத்து 31 ஆயிரத்து 601 தடுப்பூசிகளும், மேற்கு வங்காளத்தில் 59 லட்சத்து 58 ஆயிரத்து 488 தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »