Press "Enter" to skip to content

100 கோடி லஞ்ச விவகாரத்தில் சிபிஐ விசாரணை – மகாராஷ்டிரா உள்துறை மந்திரி ராஜினாமா

தேசியவாத காங்கிரசை சேர்ந்த உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது முன்னாள் மும்பை காவல் துறை கமிஷனர் கூறிய குற்றச்சாட்டு மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை

மும்பை முன்னாள் காவல் துறை கமிஷனர் அம்மாநில முதல் மந்திரிக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் மந்திரி அனில் தேஷ்முக் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூல் செய்து தருமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை அடுத்து அனில் தேஷ்முக்கை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், காவல் துறையினர்  சிலரின் உதவியுடன் அனில் தேஷ்முக் மிரட்டி பணம் பறித்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது விசாரணை நடத்தி எஃப்ஐஆர் பதிவு செய்ய மும்பை உயர்நீதிநீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச புகாருக்கு ஆளாகி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மும்பையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை முதல் மந்திரி இதுவரை ஏற்றுக்கொண்டதாக தகவல் இல்லை. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »