Press "Enter" to skip to content

அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு – 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய கழிவுநீர் தேக்கம் அமைந்துள்ளது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய கழிவுநீர் தேக்கம் அமைந்துள்ளது. பாஸ்பேட் ஆலையிலிருந்து வெளியேறிய பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கலந்த பல லட்சம் லிட்டர் நீர் இந்த கழிவுநீர் தேக்கத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த கழிவு நீர் தேக்கத்தின் சுற்றுச்சுவரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நச்சு கழிவு நீர் கசிந்து வருகிறது.

கழிவு நீர் கசிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நச்சு கலந்த நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.‌ இதனிடையே சுற்றுச்சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து கழிவு நீர் கசிவை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனைத் தொடர்ந்து மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் மாகாணம் முழுவதும் அவசர நிலையை அறிவித்தார்.

தம்பா நகரில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த கழிவுநீர் தேக்கத்துக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. கழிவுநீர் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »