Press "Enter" to skip to content

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது

234 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், இரவு 7 மணிக்கு முடிவடைந்தது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலை 6 மணிக்கே வரிசையில் இன்று முதல் நபராக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற காத்திருந்தனர்.

மதியம் வெயில் வாட்டி எடுப்பதால் காலையிலேயே வாக்குகளை பதிவு செய்ய முடிவு செய்தனர். இதனால் காலையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 நிலவரப்படி 26.29% வாக்குகளாக அதிகரித்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமாக இருந்தது. மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமாக உயர்ந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலையில் இருந்து பார்த்தால் மதியம் 3 மணியில் இருந்து 5 மணி வரை 10.25 சதவீத வாக்குகள் பதிவாகின. மற்ற நேரங்களில் சராசரியாக 13 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணிக்குப்பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சரியாக 7 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமிக்கப்பட்டது.

சில இடங்களில் வாக்கு எந்திரம் பழுது, மின்னணு எந்திரம் உடைப்பு, வாக்கு நிறுத்தி வைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால், வாக்குப்பதிவு முழுவதும் நிறுத்துவதற்கான எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »