Press "Enter" to skip to content

நாட்டில் ஒரே நாளில் 43 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன.

தடுப்பூசி திட்டத்தின் 80-வது நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 43 லட்சத்து 966 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவே ஒரு நாளில் போடப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை டோஸ் தடுப்பூசி ஆகும்.

இதன்மூலம் இதுவரை நாட்டில் போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 8 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 926 ஆக அதிகரித்து இருக்கிறது.

நேற்று முன்தினம் முதல் டோஸ் தடுப்பூசி 39 லட்சத்து 505 பேருக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 4 லட்சத்து 461 பேருக்கும் போடப்பட்டது.

8 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 926 டோஸ் தடுப்பூசி இதுவரை செலுத்தப்பட்டதில், 89 லட்சத்து 60 ஆயிரத்து 61 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோசும், 53 லட்சத்து 71 ஆயிரத்து 162 சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது டோசும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதேபோன்று 97 லட்சத்து 28 ஆயிரத்து 713 முன்கள பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 42 லட்சத்து 64 ஆயிரத்து 691 முன்கள பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 3 கோடியே 41 லட்சத்து 6,071 பேருக்கு முதல் டோஸ், 8 லட்சத்து 12 ஆயிரத்து 237 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

தடுப்பூசிகளை பொறுத்தமட்டில் நாட்டிலேயே மராட்டியத்தில் தான் அதிக எண்ணிக்கையில் ( 81 லட்சத்து 27 ஆயிரத்து 248) போடப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »