Press "Enter" to skip to content

கார் ஓட்டிக்கொண்டு தனியாக சென்றாலும் முக கவசம் கட்டாயம் – டெல்லி உயர்நீதிநீதி மன்றம் தீர்ப்பு

கொரோனா காலத்தில் முக கவசம் அணிவது பாதுகாப்பு கவசம் போன்றது என நீதிபதி குறிப்பிட்டார்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான மாநிலங்களில் ஒன்று, டெல்லி. அங்கு வாகனங்களை ஓட்டிக்கொண்டு தனிமையில் சென்றாலும், முக கவசம் அணியாமல் சென்றால் குற்றம் என்று கூறி மாநில அரசு அபராதம் விதிக்க முடிவு செய்தது.

இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதி பிரதிபா எம்.சிங், வாகனங்களை ஓட்டிக்கொண்டு தனிமையில் சென்றால்கூட முக கவசம் அணிவது கட்டாயம் என நேற்று தீர்ப்பு அளித்தார். கொரோனா காலத்தில் முக கவசம் அணிவது பாதுகாப்பு கவசம் போன்றது என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான டெல்லி அரசின் உத்தரவில் தலையிட மறுத்து விட்ட உயர்நீதிநீதி மன்றம், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »