Press "Enter" to skip to content

துருக்கியை விடாத கொரோனா – 38 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,676 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்காரா:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனைத்தொடர்ந்து துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் 2-வது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 52,676 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 37,98,333 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக 248 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 33,702 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இதுவரை 33,01,217 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 4,63,414 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »