Press "Enter" to skip to content

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு

கொரோனா 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோவுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்த  நிலையில், டெல்லியில் மத்திய கல்வித்துறை மந்திரி  மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பிறகு, மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

கொரோனா 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வரும் 4ந் தேதி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. வரும் 4ந் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க இருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »