Press "Enter" to skip to content

விமானப்படையின் 3 நாள் மாநாடு தொடங்கியது – பாதுகாப்பு சவால்கள் பற்றி ஆலோசனை

இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் மாநாடு ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாடு, நேற்று டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் தொடங்கியது. இது, 3 நாள் மாநாடு ஆகும்.

புதுடெல்லி:

டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு
தொடங்கியது. நாடு சந்திக்கும் பாதுகாப்பு சவால்கள் குறித்து இதில் ஆலோசனை
நடத்தப்படுகிறது.

இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் மாநாடு ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்பட்டு
வருகிறது. இந்த மாநாடு, நேற்று டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில்
தொடங்கியது. இது, 3 நாள் மாநாடு ஆகும்.

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மாநாட்டை தொடங்கி வைத்தார். போருக்கு
எப்போதும் தயாராக இருப்பதற்காக விமானப்படைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

முதல் நாள் மாநாட்டில், கிழக்கு லடாக்கில் உள்ள சூழ்நிலை உள்பட நாடு
சந்தித்து வரும் ஒட்டுமொத்த பாதுகாப்பு சவால்கள் குறித்து விமானப்படை உயர்
அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாடு சந்திக்கும் எதிர்கால சவால்களை கருத்திற்கொண்டு, விமானப்படையின்
திறன்களை மேலும் அதிகரிப்பதற்கான கொள்கைகள் மற்றும் வியூகங்கள் குறித்தும்
அதிகாரிகள் இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்துகிறார்கள். விமானப்படையில்
மேற்கொள்ளப்பட்டு வரும் நல்வாழ்வு நடவடிக்கைகள் பற்றியும்
விவாதிக்கிறார்கள்.

மாநாட்டில், விமானப்படையின் அனைத்து பிராந்திய தலைமை அதிகாரிகள், அனைத்து
முதன்மை அதிகாரிகள், தலைமை இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »