Press "Enter" to skip to content

விஸ்டன் பட்டியலில் இடம்பெற்ற சச்சின், கபில்தேவ், விராட் கோலி

கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் பட்டியலில் சச்சின் மற்றும் விராட்கோலி பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

லண்டன்:

கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் இதழ் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1971-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து கவுரவித்துள்ளது.

இதன்படி 1970-களில் விவியன் ரிச்சர்ட்சும் (வெஸ்ட்இண்டீஸ்), 1980-களில் கபில்தேவும் (இந்தியா), 1990-களில் சச்சின் டெண்டுல்கரும் (இந்தியா), 2000-களில் முரளிதரனும் (இலங்கை), 2010-களில் விராட் கோலியும் (இந்தியா) சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இலங்கைக்கு எதிராக 2008ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, 2010 முதல் 2019ல் விளையாடிய 227 ஒருநாள் போட்டிகளில் 42 சதம் உட்பட 11,125 ஓட்டத்தை எடுத்திருந்தார். தவிர இவர், 2011ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

கடந்த ஆண்டின் சிறந்த முன்னணி வீரருக்கான விருதை இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 2வது முறையாக தட்டிச் சென்றார். இவர், கடந்த ஆண்டு விளையாடிய 7 தேர்வில், 641 ரன், 19 மட்டையிலக்கு கைப்பற்றினார். சிறந்த முன்னணி வீராங்கனைக்கான விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனே கைப்பற்றினார். சிறந்த முன்னணி டுவென்டி20 வீரருக்கான விருதை விண்டீஸ் ஆல் ரவுண்டர் போலார்டு வென்றார்

கடந்த ஆண்டின் சிறந்த ஐந்து வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டாம் சிப்லே, ஜாக் கிராலே, டேரன் ஸ்டீவன்ஸ், விண்டீசின் ஜேசன் ஹோல்டர், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இடம் பிடித்துள்ளனர்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »