Press "Enter" to skip to content

தொழில்துறைக்கு ஆக்சிஜன் வினியோகிக்க 22-ந் தேதி முதல் தடை – மத்திய அரசு உத்தரவு

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு நாட்டின் பல பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு நாட்டின் பல பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் வினியோகிப்பதை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக, மருத்துவ ஆக்சிஜனின் தேவையும் கடுமையாக அதிகரித்து இருக்கிறது, குறிப்பாக அதிக நோயாளிகள் கொண்ட மாநிலங்களான மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் இதன் தேவை அதிகமாக உள்ளது. எனவே இது குறித்து ஆய்வு செய்த மத்திய அரசின் சிறப்பு குழுவினர், தொழில்துறைக்கு வழங்கப்படும் ஆக்சிஜனை மருத்துவத்துறைக்கு திருப்பி விட பரிந்துரைத்துள்ளனர்’ என கூறியுள்ளார்.

அந்த பரிந்துரைப்படி, வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை, 9 குறிப்பிட்ட துறைகளை தவிர பிற தொழில்துறைகளுக்கு ஆக்சிஜன் வினியோகிப்பதற்கு உற்பத்தியாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ள அஜய் பல்லா, இந்த அடிப்படையில் அந்தந்த துறையினருக்கு தகுந்த அறிவுறுத்தல்களை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »