Press "Enter" to skip to content

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்- தமிழக அரசு

கொரோன பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 12,000ஐ தாண்டி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

மே 1ந்தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் . கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

கொரோனா தொற்றை 10% கீழ் குறைக்க ஏதுவாக RT-PCR பரிசோதனைகள் மேலும் உயர்த்தப்படும். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »