Press "Enter" to skip to content

தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் தடுப்பூசிக்கு சில இடங்களில் பற்றாக்குறை உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும். தினமும் 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள்.

* குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசி உடனே வழங்க வேண்டும்.

* செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

* செங்கல்பட்டில் செயல்படாமல் உள்ள நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும்.

* கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது.

* ரெம்டெசிவிர் மருந்துகள் தமிழகத்திற்கு தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »