Press "Enter" to skip to content

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் சதி – தடம்புரண்ட ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் சதியால் தடம் புரண்ட பயணிகள் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. அவர்கள் ஊருக்குள் புகுந்து அவ்வப்பொழுது கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி விட்டுச் சென்றுவிடுவது வழக்கம்.

இந்நிலையில், சத்தீஸ்ககர் மாநிலம் பான்சி மற்றும் பச்சேலி பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருந்த பயணிகள் தொடர் வண்டி ஒன்று நேற்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரெயிலில் பயணம் செய்த 30 பேரும் பாதுகாப்புடன் உள்ளனர்.

இதுபற்றி தகவலறிந்த மாவட்ட முன்பதிவு பாதுகாப்பு படை வீரர்கள் பயணிகளை மீட்பதற்கு உடனடியாக சென்றனர்.  பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என தன்டேவாடா காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் தெரிவித்துள்ளார்.

மேலும், நக்சலைட்டுகளின் சதியால் தொடர் வண்டி தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானது எனவும் அவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »